×

மகாளய அமாவாசையை ஒட்டி நீர்நிலைகளில் புனித நீராடல்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு

ராமநாதபுரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு பெரும்பாலான கோயில்களில் அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உலக பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில். ஆண்டுக்கு 3 அமாவாசை முக்கியமானதாக கருதப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகும். அதில் மகாளய அமாவாசை என்பது மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர் ஆன்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் புரட்டாசி மகாளய அமாவாசையில் பூஜை செய்து புனித நீராடுவர்.

இந்நிலையில், புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்து புனித நீராடினர். இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று ராமநாதசுவாமியை தரிசனம் செய்தனர். இந்த மகாளய அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீசார் தனி வழி அமைத்து சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

The post மகாளய அமாவாசையை ஒட்டி நீர்நிலைகளில் புனித நீராடல்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Mahalaya ,Ramanathapuram ,Mahalaya Amavasya ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...